பால் வியாபாரியை போதையில் ஆபாச அர்ச்சனை செய்த குடிகாரன்; போதை ஆசாமிக்கு பால் ஊற்றிய பரிதாபம்.! நடந்த பயங்கரம்.!!

பால் வியாபாரியை போதையில் ஆபாச அர்ச்சனை செய்த குடிகாரன்; போதை ஆசாமிக்கு பால் ஊற்றிய பரிதாபம்.! நடந்த பயங்கரம்.!!



Salem Attur Man Murder Milk Vendor Arrested

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், மல்லியக்கரை கோபாலபுரம் கிராமத்தின் நடுவீதியில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 54). இவர் விவசாய கூலித்தொழிலாளி ஆவார். இவரின் மனைவி முனியம்மாள். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து, முருகேசன் பச்சையம்மாள் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 

இதில், முருகேசனுக்கு முதல் மனைவியின் மூலமாக மகன், மகளும், 2ம் மனைவியின் மூலமாக 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்கள் அனைவர்க்கும் திருமணம் ஆகிவிட்டது. மதுபோதைக்கு அடிமையாகி இருந்த முருகேசன் தினமும் மதுபோதையில் மிதந்து வந்துள்ளார். கடந்த வாரத்தின் போது கருத்தராஜாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையில் குடிக்க சென்றுள்ளார்.

Salem

அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், மறுநாளில் காலையில் முருகேசன் அங்குள்ள சர்க்கரை ஆலை பகுதியில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மல்லியக்கரை காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முருகேசன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, அவருடன் மதுபானம் அருந்திய 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது. மல்லிகைக்கரை பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர் பால் வியாபாரி. சம்பவத்தன்று மதுபோதையில் முருகேசன் சாலையில் படுத்து உறங்கியுள்ளார். 

Salem

அப்போது, அவ்வழியே வந்த பால் வியாபாரி பூவரசன், முருகேசனை சாலையில் இருந்து ஓரமாக சென்று படுக்குமாறு கூறியுள்ளார். இதனைக்கேட்ட முருகேசன் பூவரசனை ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்க்க, ஆத்திரமடைந்தவர் முருகேசனை கல்லால் அடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

கல்லால் அடித்ததோடு ஆத்திரத்தில் சென்ற பூவரசன் மறுநாள் காலையில் வந்து பார்க்கும்போது உண்மை அம்பலமாகியுள்ளது. பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து எதுவும் தெரியாது போல இருந்துள்ளார். காவல் துறையினரின் விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, முருகேசனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.