தமிழகம்

போலீசை வெட்டிய ரவுடி.! ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Summary:

rowdy shankar died in encounter

சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார் சங்கர். சங்கர் மீது மேலும் பல வழக்குகளில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அயனாவரம் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீஸ் குழு ஒன்று சங்கரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்பிக்க காவலர் ஒருவரை சங்கர் வெட்டியதாக கூறப்படுகிறது. 

இதனால் தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  ரவுடி சங்கர் உயிரிழந்தார். படுகாயமடைந்த காவலரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ரவுடி சங்கர் மீது, 4 கொலை வழக்குள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி, ஆட்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற காவலர் வெடிக்குண்டு வெடித்து இறந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் ரவுடி என்கவுண்டர் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement