ரவுடி பேபி சூர்யாவின் மீது குண்டாஸ் பாய்ச்சல்.. அதிரடி காண்பித்த அதிகாரிகள்.!

ரவுடி பேபி சூர்யாவின் மீது குண்டாஸ் பாய்ச்சல்.. அதிரடி காண்பித்த அதிகாரிகள்.!


Rowdy Baby Surya Arrested Under Goonda Act

மதுரையில் வசித்து வந்த பெண்மணி சுப்புலட்சுமி என்ற சூர்யா (வயது 35). இவரை ரவுடி பேபி சூர்யா என்று கூறினால் சமூக வலைத்தளத்தை உபயோகம் செய்பவர்களுக்கு தெரியும். திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த சூர்யா, டிக் டாக் செயலியில் மூழ்கி இருந்ததால் கணவரை பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

இதனையடுத்து, கடந்த சில வருடமாகவே தனது ஆண் நண்பரான மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிக்கா என்ற சிக்கந்தர்ஷாவுடன் (வயது 45) இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி நடத்தி வந்த யூடியூப் சேனல் தொடர்பாக விமர்சித்து, பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர்.

rowdy baby surya

இந்த சம்பவம் தொடர்பாக பெண்மணி தனது கணவரோடு கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சூர்யா மற்றும் சிக்கந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பல்வேறு புகார்கள் சூர்யாவின் மீது முன்வைக்கப்பட்ட நிலையில், சிக்கந்தரை ஏற்கனவே காவல் துறையினர் குண்டரில் கைது செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, தற்போது டிக் டாக் முட்டுச்சந்துக்குள் ரவுடி பேபி சூர்யா என்ற பெயரில் வளம் வந்த சுப்புலட்சுமியின் மீதும் குண்டர் சட்டம் பாய்ச்ச உத்தரவிடப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நகலும் சூர்யாவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.