தமிழகம்

திருடர்களை புரட்டியெடுத்த பொதுமக்கள்.! ஊரையே மிரட்டி சவால் விட்ட திருடர்கள்.! நாங்க மதுரைல என்ன பண்ணிருக்கோம் தெரியுமா.?

Summary:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பரமத்தி சேற்றுக்கால் மாரியம்மன் கோயிலில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பரமத்தி சேற்றுக்கால் மாரியம்மன் கோயிலில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பரமத்தி சேற்றுக்கால் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று அந்த கோவிலில் காவலாளியை கட்டிப்போட்டு விட்டு மர்மநபர்கள் சாமியின் தங்கம், வெள்ளி கிரீடங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கோவிலில் ஒரு அறையில் அடைக்கப்பட்ட காவலாளி தனது செல்போன் மூலமாக கிராம மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காவலாளியை மீட்டுள்ளனர். அங்குநடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், மர்மநபர்கள் 3 பேரும் கொள்ளையடித்த பணத்தை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் எண்ணிக் கொண்டிருந்துள்ளனர். இதனைப்பார்த்த பொது மக்கள் அவர்களை பிடித்து கைகளை கட்டி தர்ம அடி கொடுத்துள்ளனர். பொதுமக்களிடம் அடிவாங்கிய கொள்ளையர்கள் பயமில்லாமல், காவல்துறை வரட்டும் எங்களை கைது செய்யட்டும், அதற்குப் பின்னர் எங்களை பற்றி உங்களுக்கு தெரியும். 

எங்களை அடித்து விட்டீர்கள் அல்லவா? பொறுத்து இருந்து பாருங்கள். நாங்கள் மதுரையில் எத்தனை தலையை உருட்டி இருக்கிறோம் தெரியுமா.? இப்பொழுது எங்களிடம் கத்தி இல்லாததால் நீங்கள் தப்பித்தீர்கள். போலீஸ் இங்கே வந்தாலும் எங்களின் கை, கால்களை உடைக்க தான் முடியும். தூக்கில் போட முடியாது என்று கொஞ்சம் கூட பயமில்லாமல் பேசியுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மதுரையை சேர்ந்த ராசு, முருக சூர்யா, கருப்பசாமி என்பதும், இவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.


Advertisement