திருட்டு வழக்கில் கொள்ளையனை பிடிக்க சென்றபோது போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு.!

திருட்டு வழக்கில் கொள்ளையனை பிடிக்க சென்றபோது போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு.!


robber attacked police

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர்வடகரையை அடுத்த ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்தினகரன் (வயது 30). இவர் மீது பல காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி பகுதியில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையில் பால்தினகரனுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட போலீசார், அவரிடம் விசாரிப்பதற்காக நேற்று அதிகாலை அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

arrest

அங்கு அவரது வீட்டின் கதவை தட்டி பால் தினகரனை எழுப்பினர். இதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதற்கு பால்தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவரை மடக்கி பிடிக்க போலீசார் முயன்றனர். அப்போது பால்தினகரன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென்று போலீஸ்காரர் சக்திவேல் என்பவரின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து வெளியே ஓடி விட்டார்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த போலீஸ்காரர் சக்திவேலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் ஆய்க்குடி சுடுகாட்டு பகுதியில் பதுங்கி இருந்த பால்தினகரனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.