ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு..! நடந்தது என்ன.?

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு..! நடந்தது என்ன.?


Rescue of abducted young girl

நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவ சரவணன்-வுசல்யா தம்பதிக்கு 14 வயதில் மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சரவணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கவுசல்யா தனது பிள்ளைகளுடன் வீட்டு மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்துள்ளார்.

அப்போது இரவு சுமார் 2 மணி அளவில் மர்ம நபர்கள் மொட்டைமாடியில் தூங்கி கொண்டிருந்த கவுசல்யாவை எழுப்பி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். மேலும் கவுசல்யா மற்றும் அவரது மகனின் கைகளை கட்டி போட்டு விட்டு கவுசல்யாவின் மகளை மிரட்டி அங்கிருந்து கடத்தி சென்றுள்ளனர். மேலும் கவுசல்யா அணிந்திருந்த நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சிறுமியை கடத்திய மர்மநபர்கள் கவுசல்யா வைத்திருந்த செல்போனில் இருந்த சிம் கார்டையும் எடுத்து சென்றனர்.

கவுசல்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களிடம் நடந்தவற்றை கவுசல்யா கூறினார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் வீட்டின் உரிமையாளரான முருகேசனுக்கு கவுசல்யாவின் சிம் எண்ணில் இருந்து போன் வந்தது. அப்போது போனில் பேசிய மர்மநபர்கள் சிறுமி உயிருடன் வேண்டும் என்றால் தங்களுக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்துள்ளனர்.

பின்னர், காவல் துறையின் அதிரடி நடவடிக்கையால் அலங்காநத்தம் அருகே கடத்தப்பட்ட 11 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கடத்தியதாக உறவினர்கள் மணிகண்டன், பொன்னுமணி தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் பெட்ரோல் நிலையத்தில் சிறுமியை இறக்கிவிட்டு தம்பதி தப்பிச் சென்ற போது, காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.