அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
22ஆம் தேதி முதல் வீடு தேடி வருகிறது ரூ.1000 நிவாரணம்! தமிழக முதல்வர் அதிரடி!
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, திருவள்ளூர், செங்கப்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ரேசன் குடும்ப அட்டைக்காரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 4 மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு, வீட்டிற்கே சென்று நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 22ம் தேதி முதல் வீட்டிற்கு சென்று பணம் கொடுக்கும் பணி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.