இளம் பெண்ணின் செல்போன் முழுக்க வந்து குவிந்த ஆபாச படம்.! என்னனு விசாரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!

இளம் பெண்ணின் செல்போன் முழுக்க வந்து குவிந்த ஆபாச படம்.! என்னனு விசாரித்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!


Recharge shop owner send videos to girl customer

செல்போன் ரீசார்ஜ் செய்ய வந்த இளம் பெண்ணின் தொலைபேசி எண்ணிற்கு ரீசார்ஜ் கடைக்காரர் தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் ரீசார்ஜ் செய்யவேண்டும் என்றால் கடை கடையாக தேடி அலையவேண்டும். ஆனால் தற்போது இணையத்தின் அதிவேக வளர்ச்சியால் தங்கள் எண்ணிற்கு தானாவே ரீசார்ஜ் செய்ய கற்றுக்கொண்டனர் மக்கள். இருப்பினும் இன்னும் சில இடங்களில் தொலைபேசிக்கு கடைக்கு சென்று ரீஜார்ஜ் செய்யும் சூழல் உள்ளது.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த அகரவல்லம் கிராமத்தை சேர்ந்த அப்ரீத் என்ற நபர் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். அவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ரீசார்ஜ் செய்வதற்காக சென்றுள்ளார்.

ரீசார்ஜ் செய்யவேண்டிய தொகையை கூறிவிட்டு கூடவே தனது தொலைபேசி எண்ணையும் கூறியுள்ளார் அந்த பெண். பெண் கூறிய அந்த எண்ணிற்கு ரீசார்ஜ் செய்துவிட்டு சிறிதுநேரம் கழித்து அதே எண்ணிற்கு ஆபாச வீடியோக்களையும் அனுப்பியுள்ளார் அப்ரீத்.

தனது வாட்சப் எண்ணிற்கு தொடர்ந்து ஆபாச வீடியோக்கள் வருவதை பார்த்த அந்த பெண் பதறிப்போய் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இளம் பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி ரீசார்ஜ் கடை நடத்திவரும் அப்ரீத்தை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் அப்ரீத் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.