பேருந்துகள் எப்போது இயக்கப்படுகிறது.? தயாராகும் ஸ்டிக்கா் ஒட்டும் பணி!ready for public transport

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (31ம்தேதி) முடிவடைகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் 5வது  கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கை முழுமையாக நீக்கிவிட்டால் கொரோனா சமூக பரவலாக மாறி உயிர் இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி இருக்கிறது.

bus

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், பேருந்து ஓடஅனுமதிப்பது, பொதுமக்களை வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதிப்பது, கடை திறக்கும் நேரத்தை அதிகரிப்பது உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவிக்கலாம் என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில் பயணிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணிக்க வசதியாக அரசுப் பேருந்துகளின் இருக்கைகளில் சமூக இடைவெளிக்கான ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தால் பேருந்துகளை இயக்கத் தயார் நிலையில் இருக்குமாறு போக்குவரத்து அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனா்.