தளர்வுகளே இல்லாத ஊரடங்கு!! ஆனால் ரேஷன் கடைகள் செயல்படுமா?? அமைச்சர் கூறிய தகவல்..

தளர்வுகளே இல்லாத ஊரடங்கு!! ஆனால் ரேஷன் கடைகள் செயல்படுமா?? அமைச்சர் கூறிய தகவல்..


ration-shops-open-status-during-full-lockdown

ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கின்போது ரேஷன் கடைகள் செயல்படுவது குறித்து அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துவருவதால் தமிழகத்தில் நாளை முதல் ஒருவாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பால், குடிநீர், மருந்தகம், பெட்ரோல் பங்க் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறந்திருக்கும்.

அரசு அனுமதித்த நேரங்களில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படும். அதேபோல் காய்கறி, பழங்கள் போன்றவை கூட்டுறவு சங்கங்களுடன் சேர்ந்து பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரேஷன் கடைகள் ஒரு வாரம் இயங்குவது பற்றி கேள்வு எழுந்த நிலையியல், இதுகுறித்து முதல்வருடன் பேசி முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். மேலும், கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2,000 இதுவரை 96.4% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.