ரேஷன் கார்டு தொலைந்து போயிடுச்சா! இதனை செய்யுங்கள்!
குடும்ப அட்டை ஆரம்பத்தில் புத்தகம் போல் இருந்தது. தற்போது ஏடிஎம் கார்டு போலவே சிறிய அளவில் ஸ்மார்ட் கார்டாக மாற்றிவிட்டனர். இதனால் ரேஷன் கார்டு தொலைந்து போவதுற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ரேஷன் கார்டு தொலைத்தவர்கள், மாற்று கார்டு கிடைக்கும் வரை, ஆதார் அட்டையை காட்டி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கார்டு தொலைத்தவர்களுக்கு, மாற்று கார்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. அதுவரை அவர்கள் ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களின், ஆதார் கார்டு அல்லது பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும், OTP (ஒன் டைம் பாஸ்வேர்டு) வாயிலாகவும், ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு ஊழியர்கள் பொருட்கள் தர மறுத்தால். அவர்கள் மீது புகார் அளிக்கலாம் எனவும், அவ்வாறு புகார் அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.