முக்கிய தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார்.!! திமுகவுக்கு நெருக்கடி.?

முக்கிய தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமார்.!! திமுகவுக்கு நெருக்கடி.?


rathika in velachery thoguthi

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சரத்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில்  ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கோண்டனர்.

rathika

அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய கில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் விவேகானந்தா, வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது வேளச்சேரி தொகுதியில் திமுகவின் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.