வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்... அவதிப்படுபவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை..!!



Rapidly spreading viral fever... Doctor's advice for sufferers..

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 

தமிழகத்தில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பல மாவட்டங்களில் பரவிவரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்த வைரஸ் காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது. வேகமாக பரவும் இந்த காய்ச்சலால் நான்கு நாட்களுக்கு தொண்டை வலி, இருமல், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதே இந்தக் காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பருவகாலங்களில் வழக்கமாக பரவும் வைரஸ் தொற்று என்பதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று சுகாதார துறை கூறியுள்ளது, காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இந்த காய்ச்சலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பனி சீசன் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

காய்ச்சல், சளிக்கு மருத்துவர்களிடம் உரிய பரிசோதனை செய்த பின்னரே மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர் கூறிய மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை செய்ய  அறிவுறுத்தியுள்ளனர்.