பம்புசெட்டில் குளிக்கச்சென்ற 2 சகோதரிகள் தாய் கண்முன்னே உயிரிழப்பு.. வேடிக்கை வினையான பரிதாபம்.!

பம்புசெட்டில் குளிக்கச்சென்ற 2 சகோதரிகள் தாய் கண்முன்னே உயிரிழப்பு.. வேடிக்கை வினையான பரிதாபம்.!


Ranipet Sholingur Kaveripakkam 2 Minor Girl Died in Well In Front of his Mother

தாயுடன் மகள்கள் கிணற்று பம்புசெட்டில் குளிக்க சென்ற நிலையில், 2 சிறுமிகள் தாய் கண்முன்னே துடிதுடித்து கிணற்றில் நீரில் மூழ்கி பலியான சோகம் நடந்துள்ளது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர், அம்மனேரி கிராமத்தில் வசித்து வருபவர் முரளி. இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ரேகா (வயது 32). முரளிக்கும் - ரேகாவிக்கும் கடந்த 15 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த தம்பதிகளுக்கு கோமதி என்ற 12 வயது மகளும், தீவிகா என்ற 8 வயது மகளும் இருக்கின்றனர். அங்குள்ள பள்ளியில் கோமதி 6 ஆம் வகுப்பும், தீவிகா 3 ஆம் வகுப்பும் பயின்று வருகிறார்கள்.  இந்நிலையில், ரேகா தனது மகள்களை அழைத்துக்கொண்டு, காவேரிப்பாக்கம் கன்னிகாபுரம் கிராமத்தில் இருக்கும் தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அங்கு, இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ள நிலையில், நேற்று காலை நேரத்தில் விவசாய நிலத்தில் உள்ள பம்புசெட்டில் மகள்கள் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். ரேகா துணிகளை துவைத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, சகோதரிகள் இருவரும் கிணற்றின் அருகே நின்று அதனை வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். 

Ranipet

எதிர்பாராத விதமாக இருவரும் கிணற்றுக்குள் விழுந்துவிடவே, பதறிப்போன ரேகா அக்கம் பக்கத்தினரை அபய குரலுடன் உதவிக்கு அழைத்துள்ளார். இதனைக்கேட்டு அங்கிருந்தவர்கள் வருவதற்குள் சகோதரிகள் கிணற்றில் மூழ்கிவிட, அவர்களை மீட்க முயற்சித்தும் பலனில்லை. இதனால் இராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 30 நிமிடத்திற்கு பின்னர், சகோதரிகளின் உடலை பிணமாக மீட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்த காவேரிப்பாக்கம் காவல் துறையினர், சகோதரிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.