பெற்றோர்களின் சண்டையால் பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்; மின் ஒயரை மிதித்து நடந்த சோகம்.!Ranipet Minor boy Died Electric Attack 


இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தண்டலம், ஏரிக்கரை தெருவில் வசித்து வருபவர் துளசி. இவரின் மகன் மணிகண்டன் (வயது 8). சிறுவன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

நேற்று இரவில் சிறுவனின் பெற்றோர் சண்டையிட்டுள்ளனர். இதனைக்கண்ட மணிகண்டன் பெற்றோர் தன்னை அடிப்பார்களோ என எண்ணி வீட்டில் பயந்து ஓடி இருக்கிறார். 

Ranipet

அப்போது, வீட்டின் வெளியே மின் இணைப்புக்கு என பொருத்தப்பட்டிருந்த வயர் அறுந்து கிடக்க, அதனை தெரியாது மிதித்த சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான். 

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த இராணிப்பேட்டை காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.