15 அடி கால்வாயில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து கோர விபத்து; கர்ப்பிணி பெண் பரிதாப பலி.!

15 அடி கால்வாயில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து கோர விபத்து; கர்ப்பிணி பெண் பரிதாப பலி.!


Ramanathapuram Paramakudi Pregnant Girl Died Accident

 

கணவருடன் கர்ப்பிணி பெண் பயணம் செய்தபோது, அவர்களின் வாகனம் கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்மணி பரிதாபமாக பலியாகினார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, கீழப்பெருங்கரை பகுதியில் இருசக்கர வாகனம் சென்றுகொண்டு இருந்தது. இந்த வாகனத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரின் கணவர் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். 

இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம்  கீழப்பெருங்கரை பகுதியில் உள்ள கால்வாய் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலைதடுமாறி சாலையோர 15 அடி கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

ramanathapuram

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மற்றும்  தொடர்பான விபரங்கள் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு வருகின்றது என முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.