ச்சீ.. கருமம்.. 52 வயது அரசுப்பள்ளி ஆசிரியர் செய்யும் காரியமா இது?.. ஆசிரியைக்கு செல்போனில்., அதிர்ச்சி..!ramanathapuram-paramakudi-govt-school-teacher-chandran

அரசு பள்ளி ஆசிரியைக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வரலாறு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாகாச்சி பகுதியை சார்ந்தவர் சந்திரன் (வயது 52). இவர் பரமக்குடி அருகேயுள்ள சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், வரலாறு பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

இவர் வாட்சப் செயலி வாயிலாக ஆசிரியை ஒருவருக்கு ஆபாச தகவலை அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியை, ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ramanathapuram

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சத்திரக்குடி உதவி ஆய்வாளர் நாகராஜன், விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் சந்திரனின் மீது வழக்குப்பதிவு செய்து செல்போனை ஆய்வு செய்துள்ளார். 

இதன்போது, ஆசிரியர் சந்திரன் ஆசிரியைக்கு ஆபாச தகவலை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகவே, சந்திரனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.