சீறும் காற்றுடன் சில்லரிக்கும் செல்பி.. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அலட்சியம்.!

சீறும் காற்றுடன் சில்லரிக்கும் செல்பி.. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அலட்சியம்.!



Ramanathapuram DhanushKodi Tourist Danger Selfie

தென்மேற்கு பருவமழை காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. கடலோர பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் இராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகு, நாட்டுப்படகில் மீன்பிடிக்க செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

பாம்பன், தங்கச்சிமடம் உட்பட இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தனுஷ்கோடியில் கடல் சீற்றம் அதிகளவு ஏற்படும் நிலையில், எம்.ஆர். சத்திரம் கடற்கரையில் இருக்கும் மீன்பிடி துறைமுகத்தில் கடலலை பல அடி உயரத்திற்கு எழுந்துள்ளது. 

காற்றின் வேகம் காரணமாக பாம்பனுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் துறைமுகத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் தடுப்புகளை அகற்றிவிட்டு ஆபத்தான முறையில் செல்பி எடுத்து வருகின்றனர். காவல் துறையினர் சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்புகின்றனர்.