தெரியாமல் காலை மிதித்த பிளஸ் 1 மாணவனுக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு.. அதிரவைக்கும் சம்பவம்.!!Ramanathapuram Crime Scene 

 

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரை பகுதியில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கண்காட்சி திடல் அமைக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூரை சார்ந்தவர்களும் அங்கு வந்து பார்வையிட்டுள்ளனர். 

ஏர்வாடியில் வசித்து வரும் முகமது என்ற 16 வயது சிறுவன், தனது நண்பர்களோடு கீழக்கரையில் நடந்த கண்காட்சிக்கு சென்று இருக்கிறார். அங்கு கண்காட்சியை பார்த்துவிட்டு வரும்போது, உட்கார்ந்து இருந்த ஒருவரின் கால்களை தெரியாமல் மிதித்து விட்டதாக தெரிய வருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த நபர் பதினோராம் வகுப்பு பயின்றவர் மாணவர் முகமதுவை கடுமையாக தாக்கி, ஓட ஓட விரட்டி இருக்கிறார். அவரின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ந்த பொதுமக்கள் திரண்டு இருக்கின்றனர். மக்களை கண்டதும் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.