தமிழகத்தில் கெத்து காட்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து..!

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசப


rajnath-sing-wishes-to-mk-stalin

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்து திமுக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை திமுக கூட்டணி 153 இடங்களிலும், அதிமுக கூட்டணி 80 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும், முன்னிலை பெற்று வருகிறது.

இந்தநிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான தொகுதியில் முன்னிலையில் இருக்கும் திமுகவுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவரது ட்விட்டர் பதிவில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி முகம் காணும் திமுகவுக்கு என்னுடைய வாழ்த்துகள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் என்னுடைய வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.