ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியை விட்டு வெளியேறியது ஏன்? ஒரு லெட்டர் பேடால் வெளியான ரகசியம்!

ரங்கராஜ் பாண்டே தந்தி டிவியை விட்டு வெளியேறியது ஏன்? ஒரு லெட்டர் பேடால் வெளியான ரகசியம்!


rajinikanth-new-tv-channel-rankaraj-bande

ரங்கராஜ் பாண்டே ரஜினிகாந்த் தொடங்கும் புதிய டிவி சேனலில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பிரபல பத்திரிகையாளரும் தந்தி டிவியின் முதன்மை செய்தியாளருமான ரங்கராஜ் பாண்டே தனது பணியினை ராஜினாமா செய்தார். அதனை உறுதி செய்யும் வகையில் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் தனது பணியின் அயர்ச்சி காரணமாகவும் மேலும், வளரும் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாகவும் தனது பணியினை ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார்.

மேலும் இதே, ஊடகத்துறையில் தனது பணி தொடரும் என்று தெரிவித்திருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்த் தனது பெயரில் டிவி சேனல் தொடங்க தனக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்றும், ரஜினி பெயரில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த ட்ரேட் மார்க், புகைப்படம், லோகோ போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளவும் ரஜினி ஒப்புதல் அளித்துள்ளார்.

rankaraj bandea

அந்த லிஸ்டில் பின்வரும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ன. தலைவர் டிவி, ரஜினி டிவி, சூப்பர் ஸ்டார் டிவி. எனவே இந்த மூன்று பெயர்களில் ஏதாவது ஓன்று ரஜினியின் புது டிவி பெயராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டே ரஜினிகாந்த்துடன் இணைந்து அவரது டிவி சேனலில் பணியாற்றுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது உண்மையாகும் பட்சத்தில் ரஜினியின் அரசியல் அடித்தளம் இன்னும் வலிமையாக அமையும் என்று ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த கூட்டணி உண்மையாகுமா? என்று காலம்தான் பதில் சொல்லும்.