எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆவேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்! ரஜினியின் பரபரப்பு பேச்சு! வைரல் வீடியோ! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆவேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்! ரஜினியின் பரபரப்பு பேச்சு! வைரல் வீடியோ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாதுறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதத்தில்  ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அதிசயம் அற்புதம் நடந்து முதலமைச்சரானார். 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் முதலவரான பிறகு அவருடைய ஆட்சி 4 மாதம், 5 மாதத்தில் கவிழ்ந்து விடும் என தமிழ்நாட்டில் சொல்லாதவர்களே கிடையாது. 99 சதவிகிதம் பேர் அதை தான் சொன்னார்கள். ஆனால் அதிலும் அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது ஆட்சி கவிழவில்லை எல்லா தடைகளையும் மீறி தொடர்ந்து கொண்டே இருக்கிறது அவரது ஆட்சி. 

எனவே நேற்றும் அதிசயம் அற்புதம் நடந்ததது, இன்றைக்கும் அதிசயம் அற்புதம் நடந்திருக்கு, நாளைக்கும் அதிசயம் அற்புதம் நடக்கும் என ரஜினிகாந்த பேசியுள்ளார். இவரது பேச்சிற்கு கைதட்டலும் வரவேற்பும் அதிகமாக இருந்தது.


 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo