அரசியல் தமிழகம்

தல அஜித் அரசியலுக்கு வருகிறாரா? அதிமுக அமைச்சரின் பேச்சால், குஷியில் தல ரசிகர்கள்!

Summary:

rajendrabalaji talk about thala ajith

ரஜினி, கமல், விஜய் தான் அரசியலுக்கு வரவேண்டுமா? எங்க 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா ? அ.தி.மு.க.விற்கு விசுவாசமாக உள்ள சினிமா நட்சத்திரங்களையும் நாங்கள் அ.தி.மு.க.வில் களம் இறக்குவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சினிமாதுறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதத்தில்  ‘உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அதிசயம் அற்புதம் நடந்து முதலமைச்சரானார். 

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நான்கைந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது? அதுபோல தமிழக அரசியலில் நாளை அதிசயங்கள் நடக்கும் என பேசினார்.

இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினி, கமல், விஜய்தான் அரசியலுக்கு வரவேண்டுமா? எங்க தல அஜித் வரக்கூடாதா? அதிமுக ஜெயிப்பதற்காக எந்த வித சித்து விளையாட்டுகளும் செய்வோம் என பேசியது உண்மைதான். அதிமுகவிற்கு விசுவாசமாக உள்ள நட்சத்திரங்களை கூட நாங்கள் களமிறக்குவோம் எனத் தெரிவித்தார். 

தல அஜித் என்றுமே ரசிகர்களை பணத்தை செலவழிக்காதீர்கள் என்ற நோக்கம் கொண்டவர். நடிப்பது எனது தொழில், அதை வைத்து விளம்பரத்தில் நடித்து பணம் சம்பாதிக்கும் நோக்கமில்லாமல், தொலைக்காட்சி விழாக்களில் கூட கலந்துகொள்ளமாட்டார். ஆனாலும் அதிமுக அமைச்சர் எங்க தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா? என கேட்டது தல ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
 


Advertisement