திடீரென மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! என்ன காரணம்? - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம்

திடீரென மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி! என்ன காரணம்?

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக அமைச்சரவையில் பால்வள துறை அமைச்சராக இருந்து வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.  இவர் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்து உள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் ஓப்பனாக பேசக்கூடியவர். பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளையும், ரஜினிக்கு ஆதரவான கருத்துகளையும் சமீப காலமாக தெரிவித்து வருகிறார். மோடி எங்கள் டாடி என்று கூறும் அளவிற்கு பாஜகவுக்கு ஆதரவாக பேச கூடியவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டதன் என்னவென்றே தெரியாமல் அரசியல் வட்டாரங்கள் குழப்பத்தில் உள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo