எழுத்தாளர் கி.ரா காலமானார்.! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

எழுத்தாளர் கி.ரா காலமானார்.! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!


Rajanarayanan Funeral with state honors

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். புதுச்சேரி பல்கல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்தார் கி.ராஜநாராயணன். இவர் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மறைந்த கி.ரா.வின் உடல் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, இன்று கருவடிக்குப்பம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அவரது மறைவுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!' என தெரிவித்துள்ளார்.