தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் கன மழைக்கு வாய்ப்பு!rain in tamilnadu.


தமிழகத்தில் வெகுநாட்களாக நல்ல மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். சில மாவட்டங்களில் மழையே பெய்யாததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிதண்ணீருக்கே கஷ்டப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.  தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது.

weather report

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.