
rain in tamilnadu
தமிழகத்தில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட சற்று அதிகம் பெய்துள்ளது. அதேபோல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழை கொட்டுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்படி தமிழக்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மீனவர்கள் மன்னார் வளைகுடா குமரி கடல் பகுதிக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்துள்ளது.
Advertisement
Advertisement