திடீரென கொட்டி தீர்த்த கனமழை! அடுத்த மூன்று நாட்களுக்கு வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!rain in tamilnadu

 

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்து குளிச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளை முதல் 21-ம் தேதி வரைகுறிப்பிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில்  தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மேடவாக்கம், சேலையூர், முடிச்சூர், கேம்ப் ரோடு, செம்பாக்கம் போன்ற பகுதிகளில் திடீரென மழை பெய்தது.

heavy rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பருவமழை சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் குறிப்பாக தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். நாளை முதல் 21-ம் தேதி வரை தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை  பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் கடலூர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி கடல்பகுதிகளில் 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால்  மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.