24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!



rain in tamilnadu


வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இன்றும் பல இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இதனால்  தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்வது நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகாலையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Rain in chennai

இந்தநிலையில் தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.