தமிழகம்

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை! சாலையில் நிரம்பியோடும் மழை நீர்!

Summary:

rain in chennai

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் மட்டும் தமிழகத்தில் பல இடங்களில் சிறிது மழை பெய்து வருகிறது. 

பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் சென்னையில், கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில், நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம்,  சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. தற்போது வரை சென்னையில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் சாலையில் நீர் தேங்கியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் இந்த நேரத்தில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement