சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை! மேலும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை! மேலும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!



rain in chennai

தமிழகத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டுவந்தனர். இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சென்னை மக்கள் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டுவந்தனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.  தற்போது பெய்துவரும் தென் மேற்குப் பருவமழை இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களை புரட்டிப்போட்டு வருகிறது.

Rain in chennai

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்து வந்தது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் வெயில் அடுத்துவந்த நிலையில் வேலூரில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்ய தொடங்கி அதிகாலை வரை மழை கொட்டியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் எனவும், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.