மக்களே உஷார்...தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

மக்களே உஷார்...தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!



rain-alert-for-11-districts-in-tamilnadu-D4JBPW

தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு போன்ற 9 மாவட்டங்களிலும், மே 18ஆம் தேதி 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.rainஅத்துடன் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.