அரசியல் தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் திடீர் ரெய்டு.! வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு.!

Summary:

கோவை குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல

கோவை குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புள்ள 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாகவும், வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் உறவினர்கள், பங்குதாரர்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் வழக்கு பதிந்துள்ளனர். அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எம்.எல்.ஏ விடுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement