தமிழகம்

வைக்கோல் போரில் இருந்து கட்டுக்கட்டாக எடுக்கப்பட்ட பணம்.! பதறிப்போன அதிகாரிகள்.!

Summary:

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.சந்திரசேகர் அவர்கள், வரும் சட்டமன்ற

திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.சந்திரசேகர் அவர்கள், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடுகிறார். இந்த நிலையில், இவரது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜேசிபி ஓட்டுனர் வலசுப்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அழகர்சாமி வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்த வைக்கோல் போரிலிருந்து ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக எடுக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் ரூ.1 கோடியைக் கைப்பற்றியுள்ளதக தகவல் வெளியாகி உள்ளது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைக்கோல் போரில் இருந்து சுமார் ரூ.1 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றியது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement