கொரோனா பரவல்.! இந்த மாவட்டங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க..!

கொரோனா பரவல்.! இந்த மாவட்டங்களில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருங்க..!


radhakrishnan-talk-about-corona

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியை ஆய்வு மேற்கொண்டார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கொரோனா அத்தொற்று எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்தாலும் மாவட்டவாரியாக கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

 மேலும், 18 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் அங்கு நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் தினசரி தொற்று 2,000 என்ற அளவில் இருக்கிறது. வார இறுதி நாட்களில் சற்று குறைகிறது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மதம் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சார்ந்த கூட்டங்கள் அதிகமாகக் கூடுவதால் தொற்று அதிகமாகிறது.

corona500 க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் குடியிருப்பில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டு மற்றவர்களுக்குப் பரவுகிறது. எனவே, அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். பணிபுரியும் இடங்களில் தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தீவிரமடைந்து வருகிறது. எனவே அந்த மாவட்டங்களில் அதனைக் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறோம். அதேபோல கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் சவால் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.