தமிழகம்

எப்படித்தான் மனசு வருதோ.. குழந்தையை சூட்கேசில் அடைத்து வைத்து கால்வாய் அருகே வீசிச் சென்ற கொடூரம்.!

Summary:

எப்படித்தான் மனசு வருதோ.. குழந்தையை சூட்கேசில் அடைத்து வைத்து கால்வாய் அருகே வீசிச் சென்ற கொடூரம்.!

ராணிப்பேட்டை மாவட்டம் தப்பூர் கிராமத்தில் கால்வாய் அருகே மூடப்பட்ட சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அந்த சூட்கேஸிலிருந்து குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த கால்வாய் வழியே சென்றவர்கள் குழந்தை அழுகும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கால்வாயில் கிடந்த சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர்.

சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில், பிறந்து சில நாட்களே ஆன அழகிய ஆண் குழந்தை ஒன்று உயிருடன் சூட்கேசில் இருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர், குழந்தையை மீட்டு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement