புரெவி புயலின் தற்போதைய நிலவரம்.! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை.!

புரெவி புயலின் தற்போதைய நிலவரம்.! வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை.!



puravi-strom-RCKU6K

வங்க கடலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்து, புயலாக நேற்று முன்தினம் மாலை வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த புயல் நேற்று இலங்கையை கடந்த நிலையில், இன்று மன்னார் வளைகுடா பகுதியை கடந்து தமிழக கடலோர பகுதிகளை அடைகிறது என்று வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இந்த புயலானது, இன்று பாம்பனுக்கு தென்கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே சுமார் 550 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை கடக்கிறது. இன்று இரவு அல்லது 4-ஆம் தேதி அதிகாலையில் புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

strom

அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்அதி கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிகப்படியான காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.