அரசியல் தமிழகம்

வரதட்சணை கொடுமைக்கு மேலும் தண்டனை உயர்வு! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

Summary:

punishment for dowry torture

வரதட்சணை கொடுமை வழக்கில் அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்களாக உயர்த்த பரிந்துரை செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம்  தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.இந்நிலையில் இன்று  மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்வதாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும்,பாலியல் தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும், பெண்களை பின்தொடரும் குற்றத்திற்கு தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி பரிந்துரை செய்துள்ளார்.


Advertisement