தமிழகம் Covid-19

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி.!

Summary:

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை க

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா இரண்டாவது பரவலை தடுக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பி.உமா மகேஸ்வரி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிடும் பணிகளில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவா்களின் ஆலோசனைப்படி அவா் தனது ஆட்சியர் முகாம் அலுவலகத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் மருத்துவர்களின் அறிவுரையின்பேரில் மருந்துகளையும் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Advertisement