மகளிர் கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.! கொண்டாடும் புதுக்கோட்டை மக்கள்.!

மகளிர் கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.! கொண்டாடும் புதுக்கோட்டை மக்கள்.!


pudukkottai-women-officers

தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவந்த உமா மகேஸ்வரி தற்போது மாற்றப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பலர் பெண் அதிகாரிகளாக உள்ளதால் புதுக்கோட்டை மாவட்டம் மகளிர் கோட்டையாக மாறியுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

pudukkottai

தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக திருமதி கவிதா ராமு அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருமதி டிகே.லில்லி கிரேஸ் அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட கோட்டாட்சியர் திருமதி அபிநயா அவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.