கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்! கல்லறையில் 2 மணி நேரமாக கிடந்த சடலம்! பரிதாப சம்பவம்!

கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்! கல்லறையில் 2 மணி நேரமாக கிடந்த சடலம்! பரிதாப சம்பவம்!


public-protest-to-bury-nurses-body

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ராணிப்பேட்டையை சேர்ந்த செவிலியர் அர்ச்சனா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் எற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

corona

இந்தநிலையில் நவல்பூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்களிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக  பேச்சுவார்த்தை நடத்தி, உடலை அடக்கம் செய்தனர். இந்த நிலையில்,  செவிலியர் உடலை புதைக்க இடையூறு செய்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்  பேரில் இந்த வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.