
public attacked accused
கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 25-ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புதூர் என்ற இடத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சிறுமியை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்துள்ளனர் காவல்துறையினர். அப்போது அங்கே கூடியிருந்த பொது மக்கள் சந்தோஷ்குமாரை தாக்கினர். உடனே அங்கிருந்த காவல்துறையினர் சந்தோஷ்குமாரை பத்திரமாக அழைத்து சென்றுள்ளனர்.
Advertisement
Advertisement