தமிழகம்

செவ்வாய் கிழமை முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி.! குஷியில் சென்னை மக்கள்.!

Summary:

செவ்வாய் கிழமை முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி.! குஷியில் சென்னை மக்கள்.!

கொரோனா பரவல் வேகமெடுத்து வந்ததால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல மாநகராட்சி தடை விதித்திருந்தது. இதனையடுத்து ஜோரோனா பரவல் சற்று குறைய துவங்கிய நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்துவருகிறது. 

இந்தநிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பால் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை  பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.  இதனால், மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இந்தநிலையில், தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டுள்ள நிலையில், சென்னை கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. 

மேலும், கடற்கரைகளில்  கூட்டமாக கூடக்கூடாது.  முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 


Advertisement