பேருந்தில் சென்ற மாணவியிடம் சில்மிஷம் செய்த தனியார் ஊழியர்.. போக்சோவில் கைது.!Private worker sexual harrasment to school girl in Chennai

பேருந்தில் சென்ற பள்ளி மாணவி இடம் சில்மிஷம் செய்த தனியார் நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

chennai

சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்தவர் எலியேசர் (வயது 42). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பூந்தமல்லி வழியாக சென்ற பேருந்தில் நேற்று பயணம் செய்துள்ளார்.

அப்போது கூட்ட நெரிசலில் பள்ளி மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த பேருந்தில் இருந்த பயணிகள் அவரை கீழே இறக்கி கடுமையாக தாக்கியுள்ளனர்.

chennai

மேலும் பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் அவரை ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.