அரசுப்பள்ளிகளை முந்திய தனியார் பள்ளிகள்.. மீண்டும் டாப்பில்  நின்று சாதனை..! கவலைக்கிடமாகும் எதிர்காலம்.!!

அரசுப்பள்ளிகளை முந்திய தனியார் பள்ளிகள்.. மீண்டும் டாப்பில்  நின்று சாதனை..! கவலைக்கிடமாகும் எதிர்காலம்.!!



private schools students get top in 10th exam

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி நிறைவுபெற்ற பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதியான  இன்று காலை 10 மணியளவில் வெளியாகின. இந்த தேர்வு முடிவுகள் படி பெரம்பலூர் மாவட்டம் 97.67% விழுக்காடு தேர்ச்சியுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. 

அதனை அடுத்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொருத்தமட்டில் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 10% அதிகரித்துள்ளது. 

tamilnadu sslc

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45% என்று இருக்கும் நிலையில் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.24%, தனியார் சுயநிதி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.38% உள்ளன. இதன் மூலமாக அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் மீண்டும் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.