அதிவேகத்தில் பறந்த தனியார் பேருந்து 2 மூதாட்டிகள் மீது மோதி கோரவிபத்து... ஒருவர் உயிரிழந்ததால் ஆவேசமடைந்த ஊர்மக்கள்..!

அதிவேகத்தில் பறந்த தனியார் பேருந்து 2 மூதாட்டிகள் மீது மோதி கோரவிபத்து... ஒருவர் உயிரிழந்ததால் ஆவேசமடைந்த ஊர்மக்கள்..!


private-bus-hit-2-aged-peoples

பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்ததால், ஊர் மக்களால் பேருந்தின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே மேல்காரப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு மூதாட்டிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து அதிவேகத்தில் பயணம் செய்த நிலையில், எதிர்பாராதவிதமாக இரண்டு மூதாட்டிகள் மீதும் வேகமாக மோதியுள்ளது. 

Private bus

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டிகள், அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த தகவல் கிராம மக்களை ஆத்திரமடைய வைத்த நிலையில், ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மேலும் சம்பந்தப்பட்ட பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஊர்மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.