தமிழகம்

சென்னை பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை திடீர் ஜப்தி.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

சென்னை பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை திடீர் ஜப்தி.! என்ன காரணம் தெரியுமா.?

தமிழகத்தில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைகளில் ஒன்றாக சரவணா ஸ்டோர் இருந்துவருகிறது. இந்தநிலையில், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பிரைம் சரவணா ஸ்டோர் எனும் துணிக்கடை ஒன்றை இந்தியன் வங்கி அலுவலர்கள் ஜப்தி செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

இந்தியன் வங்கிக்கு செலுத்தவேண்டிய ரூ.120 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.  இதற்காக ரங்கநாதன் தெருவிலுள்ள கடை மற்றும் உஸ்மான் சாலையிலுள்ள நகைக்கடை கட்டடம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

கடனை திருப்பி செலுத்தாததால் சென்னை தியாகராய நகரிலுள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி ஜப்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக இந்தியன் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.


Advertisement