தமிழகம்

தாலி கட்டிய அடுத்த நிமிடமே மணமகனை ஓங்கி அறைந்த மணமகள்.! வெளியான அதிர்ச்சி காரணம்!!

Summary:

pride beat groom minute after marriage

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜி. அவருக்கு ராசிபுரம் ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று சோமேஸ்வரர் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் மணமகளுக்கு விஜி தாலி கட்டியுள்ளார். பின்னர் அவரது நெற்றியில் பொட்டும் வைத்துள்ளார். அப்பொழுது யாரும் சிறிதும் எதிர்பார்க்காத நிலையில் மணமகள் விஜியின் கையை தட்டி விட்டு விட்டு அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து வைத்த அர்ச்சகரையும் மணமகள் அடித்துள்ளார். இதனால் மணமகன் மற்றும் அங்கு கூடியிருந்த அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 அதனைத் தொடர்ந்து தாலியை கழற்றி வீசி விட்டு மணமகள் அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர்  மணமகன் வீட்டார்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அங்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும்,திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை எனவும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் இரு குடும்பத்தாரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் விஜிக்கு அவரது உறவுக்காரப் பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 


Advertisement