அரசியல் தமிழகம்

நாம் தமிழர் கட்சியை தடை செய்தால், அனைத்து கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்! விஜயகாந்த் மனைவி அதிரடி!

Summary:

premalatha vijayakanth talk about seeman


நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலை அடுத்து பல அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சீமான் பேசுகையில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை தமிழர் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்று கூறியிருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சினர் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மேலும் சீமான் அவர்களை கைது செய்ய வேண்டும், அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிகவை சேர்ந்த, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சீமான் கருத்து குறித்து பேசியுள்ளார். அதில்,  “பிரச்சார நேரத்தில் மறைந்த தலைவர்களை பற்றி அனைவரும் பேசுவது வழங்கம் தான். இதே போன்று பலர் பேசிவருகின்றனர். சீமானின் கருத்து ஏற்க முடியாது ஒன்று என்றாலும், அவர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளையும் தான் தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.


Advertisement