கர்ப்பிணி பெண்ணின் உயிரை காவு வாங்கிய ஜோசிய நம்பிக்கை... திடுக்கிடும் தகவல்.!pregnant-woman-dies-because-of-his-belief-in-astrology

திருச்சியில் ஜோசியத்தை நம்பி கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம்  அதிர்ச்சியையும்  சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. திருமணமான இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்  தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.  மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்தால் என்ன செய்வது என்று கவலையில் இருந்துள்ளார்.

tamilnaduஇது தொடர்பாக ஜோசியக்காரரிடம் கணிப்பு கேட்கலாம் என ஜோசியம் பார்க்கச் சென்று இருக்கிறார். ஜோசியக்காரரும் இவருக்கு மூன்றாவதாக பெண் குழந்தை தான் பிறக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா தனது கருவை கலைக்க முடிவு செய்துள்ளார்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து அவர் கருக்கலைக்க சென்ற போது பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஜோசியத்தை நம்பாமல் இருந்திருந்தால் அவர் உயிருடனிருந்து இருப்பார் என மக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.